சமயபுரம் பகுதியில் உள்ள 28 தனியார் விடுதிகளில் திடீர் சோதனை – ஐந்து ஜோடிகளை அழைத்துச் சென்று விசாரணை.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள 28 தனியார் விடுதிகளில் திடீர் சோதனை – ஐந்து ஜோடிகளை அழைத்துச் சென்று விசாரணை.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலை சுற்றி ஏராளமான தங்கும் விடுதிகள் இருக்கின்றன, அங்கு சட்டவிரோதமாக விபச்சாரம் நடப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் .
இதனை அடுத்து
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சுற்றி 28க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி உத்தரவின் பெயரில்
சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராமன், லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா, உதவி ஆய்வாளர் மேனகா, சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் 28 விடுதிகளிலும் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மூன்று அணியாகப் பிரிந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக தங்கி இருந்த இளம் பெண் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் விசாரணைக்காக சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர்.K.ஜானகி.