கடலூர் மாவட்ட கடலோர காவல்படையில் உடல்நல குறைவால் உயிரிழந்த SSI.மோகன். குடும்பத்தாருக்கு நிதிஉதவி செய்த 1993 பேட்ஜ் காவல் குழுவினர்.
கடலூர்மாவட்ட கடலோர காவல்படையில் உடல்நல குறைவால் உயிரிழந்த SSI.மோகன். குடும்பத்தாருக்கு நிதிஉதவிசெய்த 1993 பேட்ஜ் காவல்குழுவினர்.
தமிழ்நாடு காவல்துறையில் 1993,ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த கடலூர் மாவட்டம், கடலூர் சோனங்குப்பம் திரு. மோகன் (சிறப்பு உதவி ஆய்வாளர்) என்பவர் கடலோர காவல்படையில் பணிபுரிந்து வந்தபோது திடீர் என்று உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜிக்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலன் இன்றி 10.05.2023 அன்று இறந்து விட்டார்.
1993ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த காவலர் குடும்பத்தை சேர்ந்த காவல்துறையின் மூலம் திரு மோகன் குடும்பதாரின் வாழ்வாதரத்திற்கு ரூ.7,04,500 (ரூபாய் ஏழு லட்சத்து நாலாயிரத்து ஐநூறு மட்டும்) வசூல் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இராஜாராம் அவர்கள் மூலம் SSI.மோகன் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. வேல்முருகன், திரு. சுந்தரம், திரு. பாபு, திரு. நடராஜன், திரு. செல்வழகன், திரு. தமிழ்மாறன், திரு. பாஸ்கர், திரு. வெங்கடேசன், திரு. மோகன், திரு. ரமேஷ்வரன், திரு. மணிமாறன், உதவி ஆய்வாளர் திரு. ஜான்பாஸ்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மறைந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 1.திரு.நம்பிராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் 2.திரு ரமேஷ்குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் 3.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திரு குமார் 4.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் தேனீ மாவட்டத்தை சேர்ந்த திரு சந்திரசேகர் 5.கோவை மாவட்டத்தை சேர்ந்த திரு சந்திரசேகர் மற்றும் 6. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த திரு ரமேஷ் ஆகிய அனைவருக்கும் அந்த அந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மூலம் அனைவருக்கும் சேர்த்து ரூ 56,36,032 (ரூபாய் ஐம்பத்தி ஆறு லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் மற்றும் முப்பத்தி இரண்டு மட்டும்) வழங்கப்படுகிறது.
இதுபோன்று 1993 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து மறைந்த 75 காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 4,53,97,205 மற்றும் உயர் மருத்துவ சிகிச்சைக்காக 4, காவலருக்கு ரூபாய். 11,78,200 ஆக மொத்தம் ரூ.4,65,75,405, 1993ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மூலம் வழங்கி தங்கள் பேட்ஜ் காவல்துறையினருக்கு உதவி செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது.
சிறப்புநிருபர்.P.முத்துகுமரன்.