திருநெல்வேலி ATM மில் தவறவிட்ட பணத்தை நேர்மையாககாவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவருக்கு மாவட்ட SP.சிலம்பரன் பாராட்டு.

திருநெல்வேலி மாவட்ட ம் ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஏர்வாடி பஜாரிலுள்ள ஏ.டி.எம்மில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூபாய் 10 ஆயிரம் பணத்தை எடுப்பதற்காக முயற்சி செய்து ஏ.டி.எம்மில் பணம் வரவில்லை என்று திரும்பி சென்றுள்ளார். பின்பு ரூபாய் 10 ஆயிரம் பணம் தாமதமாக வந்து ஏ.டி.எம்மில் இருந்துள்ளது. அதன்பின் ஏர்வாடி, கள்ளிகாட்டை சேர்ந்த பெனிஷ் ஜீவா என்பவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க சென்ற போது ரூபாய் 10,000/- பணம் ஏ.டி.எம்மில் இருந்ததை பார்த்துள்ளார். அதனை உடனடியாக ஏர்வாடி காவல் நிலையம் சென்று ரூபாய் 10,000/- பணத்தை நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. திரு. N.சிலம்பரசன்., அவர்கள் பெனிஷ் ஜீவா என்ற பள்ளி மாணவரை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
இணையாசிரியர்.U.மதனகோபால்


