கடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் பணத்தை பரிகொடுத்த பெண்ணுக்கு பணத்தை மீட்டு கொடுத்த SP.R.ராஜாராம்

 

- Advertisement -

சத்யபிரியா வயது 34 த/பெ சக்கரவர்த்தி, முத்தாண்டிகுப்பம்,கடலூர். என்பவருக்கு இணையதள மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக தொடர்பு கொண்ட நபர் கூறியதால் சத்யபிரியா என்பவர் ரூபாய். 29,435 பணத்தை ரேஸர் பே (Razor pay)மூலம் அனுப்பியதாகவும் அதன் பிறகு மேற்க்கண்டலோன் வாங்கி தருவதாக சொல்லி அழைத்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் நடவடிக்கை எடுக்குமாறு சத்யபிரியா கொடுத்த புகாரின்பேரில்.

கடலூர் மாவட்ட  காவல்கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசலு அவர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா மற்றும் போலீசார் மேற்படி ரேஸர்பே தனி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேற்படி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் தங்களது நிறுவனத்தின் மூலம் ஏமாற்றியது எனவும், எனவே பணத்தை பாதிக்கப்பட்ட வங்கி கணக்கில் திரும்ப செலுத்துமாறு அறிவுறுத்தியதின் பேரில் மேற்படி நபரின் கணக்கிலிருந்து 29,435 .பணம் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டதால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் பாதிக்கப்பட்ட சத்யபிரியா அவர்களிடம் அலுவலகத்திற்க்குநேரில்வரவழைத்து பணத்தை ஒப்படைத்தார்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.