கல்வராயன் மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டையில் ஈடுபட்ட  கள்ளக்குறிச்சி மாவட்ட SP.N.மோகன்ராஜ்.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தால் கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

- Advertisement -

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி தலைமையில் தனிப்படை காவலர்கள் அதிகாலை முதல் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது குரும்பாலூர் கடுக்கம்பட்டு ஓடையில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 500,லிட்டர் வீதம் பிடிக்கக்கூடிய 07 பிளாஸ்டிக் பேரல்களில் 2,500 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மோகன்ராஜ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிருபர்.ராமநாதன்.

Leave A Reply

Your email address will not be published.