நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம்பாயும் SP.ஹர்ஷ்சிங் எச்சரிக்கை.

 

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசாரால் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.மேற்படி தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 200, லிட்டர் கள்ள சாராய ஊறல்களை காவல்துறையினர் கைப்பற்றினார்.

 

- Advertisement -

மேலும் இக் குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்டM. குழந்தை வேலு
கண்டியன் காடு, வேட்டைக்காரன்இருப்பு. என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இக் குற்றச்சம்பவம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ்சிங்IPS அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,என்றும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சிறப்பு நிருபர் M.பாண்டியராஜன்

Leave A Reply

Your email address will not be published.