தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு, எட்டையாபுரம் மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய காவல் நிலையங்களில் SP.Dr.L.பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி கிழக்கு, எட்டையாபுரம் மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய காவல் நிலையங்களில் SP.Dr.L.பாலாஜி சரவணன்  திடீர் ஆய்வு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் கோவில்பட்டி கிழக்கு, எட்டையாபுரம் மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய காவல் நிலையங்களுக்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் எட்டையாபுரம் நான்கு வழி சாலை பைபாஸ் ரோடு சந்திப்பில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு அங்கு பேரி கார்டு அமைத்து நெடுஞ்சாலை போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்துமாறும் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

- Advertisement -

இந்த ஆய்வின்போது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. சிலுவை அந்தோணி, திரு. ரவீந்திரன், திரு. தர்மராஜ், எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகன் மற்றும் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செந்தில்வேல்முருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

நிருபர்.V.முருகேசன்.

Leave A Reply

Your email address will not be published.