கோவை மாவட்டத்தில் காணாமல் போன 252 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த SP.Dr.K.கார்த்திகேயன் IPS.

கோவை மாவட்டத்தில் காணாமல் போன 252 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த SP.Dr.K.கார்த்திகேயன் IPS.

 

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கவனக்குறைவால் தவறவிட்ட மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், IPS அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் (14.11.2024) அன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட *ரூபாய் 48,36,500/- மதிப்புள்ள 252 பேரின் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் இந்த வருடத்தில் இதுவரை ரூபாய் 1,43,15,000/- மதிப்புள்ள 758 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் தவறவிட்ட அல்லது பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்க CEIR PORTAL பயன்படுத்துமாறும், CEIR PORTAL-ல் தொலைந்து போன செல்போனில் சிம்கார்டை  உடனடியாக Block செய்ய வேண்டும் எனவும், பின்னர் தவறவிட்ட செல்போன் IMEI நம்பரை  பதிவிட வேண்டும் எனவும், அதன் பிறகு செல்போன் தொலைத்த நபரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையத்தை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தார்.

பொதுமக்கள் தவறவிட்ட அல்லது பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.எனவே செல்போன்கள் திருட்டுப்போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது CIER வலைத்தளத்திலோ புகார் செய்யவும் அறிவுறுத்தினார்.

நிருபர்.P.நடராஜ்

Leave A Reply

Your email address will not be published.