திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் குற்ற தடுப்பு நடவடிக்கையில் SP அபிஷேக் குப்தா IPS அதிரடி
திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் குற்ற தடுப்பு நடவடிக்கையில்மாவட்ட SP அபிஷேக் குப்தா IPS அதிரடி.
திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளராக
திரு. அபிஷேக் குப்தா IPS பொறுப்பேற்று திருப்பூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் பாதிப்படையாமல் குற்ற தடுப்பு நடவடிக்கையில் தமது கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் குழுவினருடன் அதிரடி நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறார்.
SP. திரு.அபிஷேக் குப்தா IPS அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தாலுகா பகுதிகளிலும் கொலை, கொள்ளை, ரவுடிசம், கள்ள லாட்டரி, போதைப்பொருள் விற்பனை ,மணல் கடத்தல், போன்றவற்றை தடுக்கும் பொருட்டு அவர்கள் தமது காவல்துறை குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டு குற்றத் தடுப்பு அதிரடி நடவடிக்கை மேற்க்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க காவல்துறையினர் துடிப்புடன் துரிதமாக செயல்பட வேண்டும் என்று தமது கீழுள்ள காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் குழுவினருக்கும் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்க்கொண்டு சாலை பாதுகாப்பு விதி மீறல்கள் மற்றும் போதை பொருள் புகையிலைப் பொருட்கள் விற்பனை, கள்ள லாட்டரி, வாகன திருட்டு, வழிப்பறி,போன்றவற்றை தடுக்கவும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிர மாக செயல்பட வேண்டும் என்று அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிப்படையாமல் பாதுகாப்புடன் வாழ தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. திரு. அபிஷேக் குப்தா IPS. அவர்கள் கூறியுள்ளார் பொதுமக்கள் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக காவல்துறையை அணுகி புகார் அளித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பாராட்டுக்குரியது.
முதன்மைஆசிரியர்.K.ராம்சுரேஷ்.