கொடைக்கானலில் பயணிகள்போடும் குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்தும் சோலைகுருவி அமைப்பினர்.
கொடைக்கானலில் சோலை குருவி என்ற அமைப்பு சார்பாக தொடரும் வனப்பகுதியை சுத்தம் செய்யும் பணி ஒரு நாளில் மட்டும் ஒரு டன் குப்பைகள் வனப்பகுதியில் இருந்து எடுத்துள்ளனர்.
யானை வடிவில் குப்பைகளைக்கொண்டு படம்வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரபல சுற்றுலா தலமாகும்.. கொடைக்கானலை சுற்றி சுமார் 70% மேலாக வனப்பகுதியே இருந்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானலை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து வனப்பகுதிகளிலும் குப்பைகள் சூழ்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது .
இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சோலை குருவி என்ற அமைப்பு வனத்துறையுடன் சேர்ந்து மாதத்திற்கு ஒருமுறை வனப்பகுதியை சுத்தம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு வனப் பகுதியில் சுத்தம் செய்து வரக்கூடிய சோலை குருவி அமைப்பினர் இதுவரை பல டன் குப்பைகளை அகற்றி உள்ளனர் .
இந்நிலையில் சோலை குருவி சார்பாக வனப்பகுதியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் சோலை குருவி அமைப்பை சேர்ந்தவர்கள், வன சரகர் திரு.பழனிக்குமார் அவர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாம்பை சோலை என்ற வனப்பகுதியை சுத்தம் செய்தனர்.
இதில் ஒரு நாளில் மட்டும் சுமார் ஒரு டன் அளவிற்கு குப்பைகளை எடுத்துள்ளனர் பிளாஸ்டிக் பாட்டில்கள் , கண்ணாடி பாட்டில்கள் , பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் எடுத்துள்ளனர்.
மேலும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனப்பகுதியில் உள்ள அகற்றி உள்ள குப்பைகளை எடுத்து அதனை யானை வடிவில் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு வனப்பகுதியில் குப்பைகளை வீசக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்ந்து இவர்களின் வனப்பகுதியை சுத்தம் செய்யும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிருபர்.R.குப்புசாமி.