முதல்வர் வாழ்த்து தெரிவித்தஅமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட்டு திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்
முதல்வர் வாழ்த்து தெரிவித்தஅமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட்டு திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்
ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரபலங்கள் திரைப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர். ஆனால் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்ட முயற்சிப்பதாக நடிகர் கமலஹாசனை கண்டித்து பல்வேறுட இயக்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களை குற்றப்பரம்பரையாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வெளி வந்துள்ள அமரன் திரைப்படத்தை கண்டித்தும், விடுதலை முழக்கமான ஆஷாதி என்ற முழக்கத்தை தீவிரவாத முழக்கமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை கண்டித்தும், அமரன் திரைப்படத்தை தமிழக முதல்வர் பாராட்டியதுடன் அதில் காட்டப்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை நீக்க அறிவுறுத்தாததை கண்டித்தும், தமிழக எஸ்டிபிஐ கட்சி சார்பில்
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளையும் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசன் அலுவலகத்தையும் இன்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி பிரபல சோனா மீனா திரையரங்கை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போன்று சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லாகட்டும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமைநிருபர்.S.வேல்முருகன்.