ஆவடிமாநகர போக்குவரத்து காவல் செங்குன்றத்தில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஆவடி காவல் சரகம், செங்குன்றம் போக்குவரத்து எம்-4 காவல் நிலையம் சார்பில், சாலைபோக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ரெட்ஹில்ஸ் கூட்ரோடு ஜங்ஷன் அருகில் நடைபெற்றது. ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதன் அவசியம் குறித்து யானை மீது ஹெல்மெட் அணிந்து இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் (RI) சோபிதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ட்ராபிக் SI. உமாபதி பொது மக்களிடம் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தில் சாலையில் செல்லும் பொழுது கண்டிப்பாக இடது புறமாக தான் செல்ல வேண்டும் என்றும், இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணிக்க கூடாது என்றும், செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது என்றும், அதிவேகம் ஆபத்தை தரும்.
மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், விபத்தில்லா பகுதியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களிலேயே அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வின் போது போக்குவரத்து காவல் SI. விவேகானந்தன், SI. செல்வராஜ், காவலர்கள் ராஜேஷ், சந்துரு உடன் இருந்தனர்.
முதன்மைஆசிரியர்.S.முருகானந்தம்.