தமிழ்நாடு சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருதை பெற்ற இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை.
சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை பெற்ற இராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது 2022 இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
22.07.2024 தேதி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர் DGP.திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது 2022 இராணிப்பேட்டை ஆய்வாளர் திரு.பார்த்தசாரதி அவர்களுக்கு சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பை வழங்கி பாராட்டினார்.
ராணிபேட்டை மாவட்ட SP.செல்வி.DV.கிரண்ஸ்ருதி IPS அவர்களிடம் இராணிபேட்டை காழல்நிலைய காவல்ஆய்வாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார் உடன் DSP.திரு.பிரபு தனிபிரிவு காவல்ஆய்வாளர் திரு.அருண்குமார் உதவிஆய்வாளர் திரு.அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.