தென்காசியில் போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசியில் போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு காவல்துறையினருக்கு மாவட்ட SP.சீனிவசன் பாராட்டு

- Advertisement -

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி கீழ வாலிபன் பொத்தை கருப்பசாமி என்பவரின் மகன் கார்த்திக்(23) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  வழக்கை விசாரணை செய்த நீதிபதி திரு.சுரேஷ் குமார் அவர்கள் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த தென்காசி அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. திரு.சீனிவசன்  அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்..

நிருபர்.K.அருணாச்சலம்.

Leave A Reply

Your email address will not be published.