திருச்சிமாவட்ட ராம்ஜிநகர் காவல்நிலையத்தின் 33,வது ஆண்டுவிழா.பொதுமக்கள் பதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிமாவட்ட ராம்ஜிநகர் காவல்நிலையத்தின் 33,வது ஆண்டுவிழா.பொதுமக்கள் பதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

16/06/2023 திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் காவல் நிலையம் 33 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வீரமணிகாவல் நிலைய காவலர்கள் துணையுடன்

- Advertisement -

காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக ஏப்ரல் மாதம் ராம்ஜிநகர் பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் அனைவருக்கும் ஆக்கப்பூர்வமான ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்ட ,மற்றும் கபாடி போட்டி என பல போட்டிகளை நடத்தி பலரையும் பங்குபெறச் செய்துஅதில் வெற்றி பெற்ற
வெற்றி வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் பங்கு பெற்ற அனைவரையும் அன்போடு அழைத்து
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் தலைமையில் துணை கண்காணிப்பாளர் திரு.பாரதிதாசன், ஜீயபுரம்,காவல் ஆய்வாளர்திரு.பாலாஜி,  சோமரசம்பேட்டை காவல்ஆய்வாளர் திரு.உதயகுமார் ஆகியோர் பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில்
பரிசுகளை வழங்கி
பல நல்ல பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டுமிக விமர்சியாக ராம்ஜி நகர் காவல் நிலையம் 33 ஆம் ஆண்டு துவக்க விழாவினைமக்கள் போற்றும் வண்ணம் நடத்தினர்.

ராம்ஜி நகர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள
காவல் துறையினருக்கு போலீஸ் பார்வை பத்திரிக்கையின் சார்பாக
தலைமை நிருபர். ராகேஷ் சுப்ரமணியன் இவ்விழாவில் பங்குகொண்டு
திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள்,
காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினை தெரிவித்தார்

மேலும் சமுதாயத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் செயலாற்றிட துணை நிற்போம் என்பதை உறுதி செய்துள்ளார் ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வீரமணி அவர்கள் ராம்ஜிநகர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நிருபர். ராகேஷ் சுப்பிரமணியன்

Leave A Reply

Your email address will not be published.