.திருநெல் வேலி மாநகரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்களின் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்த மாநகர காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி IPS.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP.திரு.சங்கர் ஜிவால் IPS அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 18-06-25 நடைபெற்ற முகாமில் 05 நபர்கள் கலந்து கொண்டு காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி IPS, அவர்களிடத்தில் புகார் மனுக்களை அளித்தார்கள். புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் கூறினார்கள்.
இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) Dr.V.பிரசண்ணகுமார் IPS, அவர்கள், (கிழக்கு) திரு.V.வினோத் சாந்தாராம் அவர்கள் மற்றும் ( தலைமையிடம்) திரு.S.விஜயகுமார் அவர்கள் கலந்துகொண்டார்கள்.
நிருபர்.R.ஜோதிபாசு.