மதுரை மாவட்டத்தில் 1கோடியே 75 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர் SP.R.சிவபிரசாத்IPS. பாராட்டு
மதுரை மாவட்டத்தில் 1கோடியே 75 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர் SP.R.சிவபிரசாத்IPS. பாராட்டு.

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் ஆனது கடந்த 01.03.2021-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன்; சம்பந்தமான புகார்களில் கடந்த இரு மாதங்களில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் ரூபாய் 16,65,200/- மதிப்புள்ள 100, மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத், IPS., அவர்களால் 11.10.2023-ந் தேதி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,75,07,600/- மதிப்புள்ள 1207,மொபைல்கள் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது
மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த பணம் பறித்த மோசடி வழக்குகளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் கடந்த இரு மாதத்தில் ரூபாய் 4,47,500/-ம் இதுவரை ரூபாய் 48,76,305 உரியவர்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில் திரும்பக் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கிகணக்கு எண், CVV மற்றும் OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், மேலும் பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் Investment App -களை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மற்றும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் loan App -களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும்Video Call ஜ attend செய்ய வேண்டாம் என்றும் வங்கி கணக்கு விபரங்களை Update செய்யுமாறு வரும் link – களை Click செய்ய வேண்டாம், Remote access App களான Anydesk, teamviewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் Cyber Crime Help line 1930, என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24, மணிநேரமும் புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத்IPS அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சிறப்புநிருபர்.J.பீமராஜ்.


