அரியலூர் நகரில் தவறவிட்ட நகையை சில மணி நேரத்திற்குள் உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் திரு.சசிகுமார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.ரமேஷ் குமார் ஆகிய இருவரும் மதியம் செந்துறை சாலையில் வழியாக ரோந்துப்பணி சென்றபோது, வெங்கடேஸ்வரா உணவகம் வெளியே 13 கிராம் தங்க நகை கீழே கிடந்து உள்ளது. இதனை அடுத்து தங்க நகையை கைப்பற்றி அருகில் உள்ள நபர்களிடம் விசாரணை செய்துவிட்டு. நகையை அரியலூர் காவல் நிலையத்தில் எடுத்து வந்து காவல் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு சென்னை ஆவடியை சேர்ந்த சுந்தரி என்பவர் நகை காணாமல் போனதாக காவல் நிலையம் வந்து புகார் அளிக்க வந்த பொழுது, தாங்கள் குடும்பத்தினருடன் தஞ்சாவூர் சென்று சாமி கும்பிட்டு விட்டு, அரியலூர் வழியாக ஆத்தூர் செல்ல திட்டமிட்டு இருந்தோம். மதிய உணவுக்காக அரியலூர் வெங்கடேஸ்வரா உணவகத்திற்க்கு சென்றபோது தவறுதலாக பர்ஸில் இருந்த நகை கீழே விழுந்ததாக கூறினார்.
இதனை அடுத்து உரிய விசாரணைக்கு பிறகு உண்மை தன்மை அறிந்த பின்னர், தலைமை காவலர் திரு.சசிகுமார் அவர்கள் தங்க நகையை அதன் உரிமையாளர் திருமதி.சுந்தரி அவர்களிடம் வழங்கினார்கள்.இந்நிகழ்வின் போது அரியலூர் நகர காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணக்குமார் அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.மகாலட்சுமி அவர்கள், மற்றும் முதல் நிலை காவலர் திரு.வெற்றிச்செல்வன் அவர்கள் உடன் இருந்தார்கள்.
நிருபர்.தங்கபாண்டி