சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவமாணவிகளுக்கு கோவை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், IPS., அவர்கள் கோவை மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் (26.06.2025) மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பொது இடங்களில் இளைய சமூகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு போதைப் பொருள்கள் உபயோகத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம்களும், விழிப்புணர்வு பேரணிகளும் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.