நாகப்பட்டினம் அரசு குழந்தைகள் காப்பத்திலிருந்து காணாமல் போன மாணவிகள் 12 மணி நேரத்தில் மீட்பு காவல்துறையினர் அதிரடி.
நாகப்பட்டினம் அரசு குழந்தைகள் காப்பத்திலிருந்து காணாமல் போன மாணவிகள் 12 மணி நேரத்தில் மீட்பு காவல்துறையினர் அதிரடி.
SP திரு.ஹர்ஷ் சிங் IPS
நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான் பேட்டை பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது இங்கு பெண் குழந்தைகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர் இந்நிலையில் 1.8 .2024 அன்று நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் 8 , மாணவிகள் பள்ளி முடிந்து காப்பகம் திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த காப்பக காவலர் கண்ணன் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் நாகப்பட்டின மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP திரு.ஹர்ஷ் சிங் IPS அவர்களின் உத்தரவின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ADSP .திருமதி. K. மகேஸ்வரி அவர்களின் மேற்பார்வையில் நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சதீஷ்குமார் அவர்களால் காப்பக ஊழியர்கள் மற்றும் மாணவிகளிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
ADSP .திருமதி. K. மகேஸ்வரி
அதில் மாணவிகள் காப்பக நிர்வாகத்திற்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்தியதாக தெரிவித்தனர் இதனை அறிந்த காப்பக ஊழியர்கள் மாணவிகளை கண்டித்துள்ளனர் இதனால் அச்சம் உற்ற மாணவிகள் பள்ளிக்கு சென்று விட்டு பள்ளி முடித்து காப்பகம் திரும்பாமல் வேறு எங்கோ சென்று விட்டனர் என்பது தெரிய வந்தது காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மாணவிகள் சென்னைக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததின் பெயரில் நாகூர் காவல் நிலைய காவல் குழுவினர் சென்னைக்கு விரைந்து மாணவிகளை சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள சகாய மாதா தேவாலயம் அருகில் கண்டுபிடித்துள்ளனர் மேலும் மாணவிகளை பாதுகாப்பாக நாகை அழைத்து வந்த நாகூர் காவல் நிலையம் ஆய்வாளர் திரு.சதீஷ்குமார் தலைமையிலான காவல் குழுவினருக்கு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ்சிங் IPS அவர்கள் பாராட்டினார்கள்.
இணைஆசிரியர். U.மதனகோபால்.