ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு காட்டூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவிய போட்டி

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு காட்டூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியபோட்டி .

- Advertisement -

செப்டம்பர் 5 ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி ஆதிதிராவிடர் அரசு தொடக்கப்பள்ளியில் போலீஸ் பார்வை குழுமம் மற்றும் 7, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி குழுமம் சார்பிலும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவர்களுக்கு ஓவிய போட்டி பேச்சு போட்டி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது விழாவில் போலீஸ்பார்வை ஆசிரியர் Dr.N.பாலகிருஷ்ணன் ஆசிரியர் களை வாழ்த்தி வாழ்த்துரை யாற்றினார்.

வாழ்க வளமுடன் அமைப்பு ஐயா கலியன் அவர்களும் 7 ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  செயலாளர்              திரு. பிரவீன் ஜான்சன் அவர்களும் காட்டூர் மாமன்ற உறுப்பினர் அவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. தனபால் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ரமேஷ் அவர்களும் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக விழா நடைபெற்றது ஆசிரியர்கள் அனைவருக்கும் போலீஸ் பார்வை குழுமம் சார்பாகவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாகவும் பொன்னாடை போர்த்தி ஆசிரியர் தின வாழ்த்து சொல்லி மரியாதை செய்யப்பட்டது விழாஏற்பாடுகளை போலீஸ் பார்வை தலைமைநிருபரும் ஏரோஸ்கேட்டோபால் அசோசியேஷன் தலைவருமான N.ராக்கேஷ்சுப்ரமணி சிறப்பாசெய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.