தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே 43 கிலோ புகையிலை போதை பொருட்கள் பறிமுதல்ஒருவர் கைது.
தென்காசி மாவட்டம் போதைபொருட்கள் புழக்கத்தால் பொதுமக்கள் மாணவர்கள் பாதிக்ககூடாது என்பதை கருத்தில்க்கொண்டு மாவட்டகாவல்கண்காணிப்பாளர்.திரு.அரவிந்த் அவர்கள் போதைபொருள்கள் விற்பவர்கள் மீதுகடும்நடவடிக்கை எடுக்கும்படி தென்காசிமாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டதன்பேரில்
காவல்துறையினர் தீவிரசோதனைகளில் ஈடுப்பட்டநிலையில் புளியங்குடி காவல் ஆய்வாளர் திரு. ஷியாம் சுந்தர் அவர்கள் மற்றும் சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.உடையார் சாமி தலைமையில் போலீசார் வம்ச விருத்தி நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை மறித்து சோதனையிட்டனர். இதில் 43, கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து புகையிலை பொருட்களையும் பைக்கையும் பறிமுதல் செய்துஇதைகடத்திவந்த புளியங்குடியை சேர்ந்த சையது அலி(41) என்பவரை காவல்குழுவினர்கைதுசெய்தனர். செய்தனர்*
நிருபர்.K.அருணாச்சலம்.