78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவர்களின் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி DSP. அறிவழகன் துவக்கி வைத்தார்
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவர்களின் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி DSP. அறிவழகன் துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடந்தது விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை திருச்சி மாவட்ட காவல்துறை திருவரம்பூர் சரக DSP. திரு. அறிவழகன் அவர்கள் துவக்கி வைத்தார் .

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்பிரமணி பொதுச்செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் செவன் ஸ்டார் அகாடமி குழுவினர் ஸ்கேட்டிங் பேரணியை பாதுகாப்புடன் நெறிப்படுத்தி வழிநடத்தி சென்றனர்.

ஸ்கேட்டிங் பேரணியில் சுமார் 50-க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்து சாலையில் ஜெய்ஹிந்த் கோஷத்துடன் மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய பதாகை ஏந்தியபடி ஸ்கேட்டிங் பேரணி சென்றனர் .
ஸ்கேட்டிங் பேரணியில் கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகளுக்கு திருவரம்பூர் DSP.திரு. அறிவழகன் அவர்கள் போதை பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு, கல்வி, விளையாட்டு, போன்றவைகளை பற்றிய மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நல்ல அறிவுரைகளை கூறி மாணவர்கள் தன்னம்பிக்கையோடும் மன தைரியத்துடனும் முழு ஈடுபாடுடனும் செயல்பட்டு வாழ்வில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியானது வெற்றிகரமாக நடைபெற்று இறுதியில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு உணவளித்துவிட்டு பேரணியானது இனிதே நிறைவுற்றது மேலும் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்பிரமணி அவர்கள் திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் மாணவர்களுக்காக ஒரு சிறப்பான நல்லதொரு ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கத்தை அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசு விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணி.


