விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக பெண்கள் குழந்தைகள் வன்கொடுமை குற்றதடுப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக பெண்கள் குழந்தைகள் வன்கொடுமை குற்றதடுப்பு விழிப்புணர்வு பேரணி.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை
மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு பிரிவு காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்SP திரு. சசாங் சாய் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASPதிரு. ஶ்ரீதரன் அவர்களின் மேற்பார்வையில்
செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. கவீணா, உடன் காவல் ஆய்வாளர் திருமதி. கீதா, உதவி ஆய்வாளர் திருமதி. கலைச்செல்வி மற்றும் காவலர்கள் தலைமையில்

- Advertisement -

செஞ்சி தமிழ் திருமகள் திருமண மண்டபத்தில் மாவட்ட சமூக நல துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராஜா தேசிங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 300 மாணவிகளும், செஞ்சி கேம்பஸ் முதலாம் ஆண்டு மாணவிகள் 300 பேரும், ராஜா தேசிங்கு தொழில் பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 300 பேரும் விழிப்புணர்வு பேரணியில் பங்கு பெற்றனர்.

இப்பேரணியில் சுமார் 900 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். செஞ்சி அரசு ஆண்கள் பள்ளியில் துவங்கி நான்கு முனை சந்திப்பு வழியாக வந்து தமிழ் திருமகள் திருமண மண்டபத்தில் முடிக்கப்பட்டது.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் சைபர் குற்றங்கள்,
குழந்தைகள் உதவி மையம் எண் 1098, பெண்களுக்கான உதவி மையம் எண் 181, ஆகியவற்றை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிருபர்.ராமநாதன்.

Leave A Reply

Your email address will not be published.