விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக மாணவர்கள் பாதுகாப்பான பயணம்பற்றி போக்குவரத்து கழக மேலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக மாணவர்கள் பாதுகாப்பான பயணம்பற்றி போக்குவரத்து கழக மேலாளர்களுடன் கலந்தாய்வுகூட்டம்.

விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக மேலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் IPS., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம் போக்குவரத்து மேலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவியர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும்.
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தவிர்த்தல்.
பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் அதிக பேருந்து வசதிகளை செய்து தரவும்
மேலும் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும் பொருட்டு.
உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களின் தொடர்பு எண்கள் ஒட்டுதல்.
இதன் மூலம் உடனடியாக எவ்வித பிரச்சனைகளுக்கும் தகவல் தெரிவிக்கவும் தீர்வுகாணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் விழுப்புரம் போக்குவரத்து உட்கோட்ட மேலாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிருபர்.ராமநாதன்.


