நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து, கொரோனா பரவாத அளவிற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் – திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி

நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து, கொரோனா பரவாத அளவிற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் – திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில், ₹.18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி வைத்து பள்ளியை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் துறை அலுவலர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இப்பள்ளியில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் 36 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் நூலகம், ஆய்வகங்கள் மற்றும் போதுமான அளவில் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவிற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்,..கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு,

முதலமைச்சரின் உத்தரவின் படி மக்கள் நல்வாழ்வித்துறையுடன் இணைந்து அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து வருகிறோம். பரவாத அளவிற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். மேலும் முதலமைச்சர் அணைத்து செயலாளர்களையும், அனைத்து அமைச்சர்களையும் அழைத்து தனியாக கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கி உள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

- Advertisement -

ஜூன் 12 மேட்டூரில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறித்த கேள்விக்கு,

கடைமடை வரை தண்ணீர் செல்லும் அளவிற்கு தூர் வாருவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

கன்னட மொழி குறித்து பேசியதற்கு கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு,

கமலஹாசன் கூறியதில் தவறு ஏதுமில்லை. தமிழில இருந்து தான் தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளும் வந்துள்ளது. அவர் கூறியதில் ஏதும் தவறில்லை என தெரிவித்தார்.

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது குறித்த கேள்விக்கு, …

ஜூன் 17-ம் தேதி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிக்காண டெண்டர் விடப்பட்ட பிறகு பேருந்து நிலையம் முழுவதுமாக பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில்,..

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லாத கொரோனா என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பள்ளிகளில் முக கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என்றார்.

தலைமைநிருபர்.S.வேல்முருகன்.

Leave A Reply

Your email address will not be published.