மதுரை மாநகரகாவல் துறைசார்பாக சித்திரை பொருள்காட்சியில் காவல்துறைஅரங்கம் ஆணையர் Dr.லோகநாதன் IPS.துவக்கிவைத்தார்.
மதுரை மாநகர் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அரசு சித்திரை பொருட்காட்சியில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் காவல்துறை அரங்கத்தை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இம்மாநகர காவல்துறை அரங்கத்தில் காவல்துறை தொழில்நுட்ப பிரிவு, தனிவிரல் ரேகை பிரிவு ,போக்குவரத்து பிரிவு ,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காவலர்கள் தங்கள் பணியின் போது பாதுகாப்பிற்காக பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி, தோட்டாக்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் மோப்பநாய் பிரிவு குதிரைப்படை பிரிவும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தற்போது பெருகி வரும் சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரச்சுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு ஒளிக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்கள் தங்களது தேவையின் போது காவல் நிலையங்களை எளிதில் அணுகி பயன்பெறும் வகையில் மாதிரி காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டு வருகிறது.
சிறப்புநிருபர்.J.பீமராஜ்.