கடலூர்மாவட்ட காவல்துறை சார்பாக மாணவ மாணவியருக்கும் பொதுமக்களுக்கும் சைபர்கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆய்வாளர் கவிதா.
கடலூர்மாவட்ட காவல்துறை சார்பாக மாணவ மாணவியருக்கும் பொதுமக்களுக்கும் சைபர்கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆய்வாளர் கவிதா.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரைபடியும், கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசலு அவர்கள் வழிகாட்டுதலின்படியும் சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக
நெய்தல் புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் 3000, நபர்களுக்கு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா மற்றும் சைபர் கிரைம் போலிசாரால் சைபர் கிரைம் சம்பந்தமாக பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், CELL PHONE பயன்பாடு குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், OTP, தொடர்பான குற்றங்கள் குறித்தும்,
குறிப்பாக ஆன்லைன் விளையாட்டின் தீமைகள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான App, களில் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி மோசடிகள், முக்கியமாக படித்த இளைஞர்களை குறி வைக்கும் Part Time Job Fraud மற்றும் தற்போது பெருகி வரும் E CHALLAN FRAUD பாதுகாப்பு குறித்தும் சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழாவில் RDO. திரு. அதியமான் மற்றும் இதர அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு 1930,உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட இருவரை மேடைக்கு அழைத்து சிறு விளையாட்டு போட்டி மூலம் சைபர் கிரைம் தொடர்பாக உண்மை மற்றும் போலிக்கான வேறுபாட்டை உணர்த்தி பரிசு வழங்கப்பட்டது.
சிறப்புநிருபர்.P.முத்துக்குமரன்.