கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சுந்தரவதனம் IPS, அவர்களால் நடத்தப்பட்டது.
கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக
பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சுந்தரவதனம் IPS, அவர்களால் நடத்தப்பட்டது.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று அதன் மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 58 மனுக்கள் பெறப்பட்டு மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரடியாக அழைத்து விசாரணை செய்து தீர்வு காணப்பட்டுள்ளது.
இச்சிறப்புமுகமானது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக நடத்தப்படுகிறது, எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சுந்தரவதனம், IPS, அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சிறப்புநிருபர்.முகமதுஹுசேன்.