விழுப்புரம் காவல் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை முழுமையாக தடுக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற DIG. ஜியாவுல் ஹக் IPS அறிவிப்பு.

விழுப்புரம் காவல் சரகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற DIG.ஜியாவுல்ஹக் அறுவித்துள்ளார்.
விழுப்புரம் காவல் சரக DIG பணியிடம் ஒரு மாத காலமாக காலியாக இருந்தது இந்த நிலையில் CBCID. DIG யாக பணிபுரிந்து வந்த திரு.ஜியாவுல் ஹக் விழுப்புரம் சரக DIG யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் விழுப்புரத்தில் உள்ள DIG அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ,மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் , இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர் பின்னர் DIG. கூறியதாவது
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் .
விழுப்புரம் காவல் சரகத்திற்க்குட்ப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய 3 மாவட்டங்களிலும் சட்ட விரோத செயல்கள், குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பாக கள்ளச்சாராயம், சாராய ஊறல்,, லாட்டரி சூதாட்டம், ரவுடிசம், போன்ற சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்படும் இதற்க்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் அவர்கள் பெயர் ஒருபோதும் வெளியிடப்பட மாட்டாது எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயல்களை தடுக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் ரவுடிசம் ஒழிக்கப்படும் காவல்கண்காணிப்பாளர் அலுவலகங்கள், துணை காவல் கண்காணிபாளர்கள்அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் சிவில் வழக்குகளை தவிர குற்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் ரவுடிசம் ஒழிக்கப்பட்டு தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தலை தடுக்க ஏற்கனவே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
மேலும் கள்ளச்சாராயம் குறித்து கிராமப்புறங்களில் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு DIG கூறினார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்ராஜ், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நிருபர்.ராமநாதன்.


