தேனி மாவட்ட காவல்துறையினருக்கு NCRP, CEIR பயிற்சி வகுப்பு.

சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய்குமார் IPS அவர்கள் NCRP, CEIR குறித்து காவலர்களுக்கு பயிற்சியளிக்க வழங்கிய உத்தரவின்படி,
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. திரு.R.சிவபிரசாத்,IPS அவர்களின் மேற்பார்வையில், 13/06/2024 ஆம் தேதி சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்களின் முன்னிலையில்
திரு.P.அழகுபாண்டி, உதவி ஆய்வாளர், செல்போன் காணாமல் போன புகார் குறித்து மனு ரசீது வழங்கி பின்னர் CEIR இணையதளத்தில் பதிவு செய்வது பற்றியும் Traceability details மூலம் பயன்படுத்துபவரின் விவரங்கள் பெற்று செல்போனை மீட்பது பற்றியும்,
இணையவழி குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930, அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றியும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கணினி காவலர்கள் (data entry operators)மற்றும் CCTNS காவலர்கள் ஆகியோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நிருபர்.R.குப்புசாமி.


