77வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மாணவர்கள் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி.

77,வது இந்திய சுதந்திரதினவிழாவை முன்னிட்டு போலீஸ்பார்வை,தமிழ்நாடுஏரோஸ்கேட்டோபால் சங்கம்,இணைந்து திருச்சியில் போலீஸ்பார்வை அலுவலகம் மற்றும் ஏரோஸ்கேட்டோபால்,SR.OUR GROCERY,அலுவலகங்களில் தேசிகொடியேற்றி இனிப்புவழங்கப்பட்டது.


விழாவில் போலீஸ்பார்வை ஆசிரியர் Dr.N.பாலகிருஷ்ணன் தேசியகொடியேற்றி உரையாற்றினார் விழாவில் போலீஸ்பார்வை முதன்மை ஆசிரியர்.KT.சிவகுமார்,தலைமநிருபர்கள்.S.வேல்முருகன்,N.ராக்கேஷ சுப்ரமணியன்.,சிறப்புநிருபர்கள்.M.பாண்டியராஜன்,S.மணிகண்டன்,நிருபர்கள்.திரு.ஶ்ரீநிவாசன்,திரு.மணி.திரு.வெங்கடாச்சலம் கலந்துகொண்டு அனைவருக்கும் சுதந்திரதினவாழ்த்துதெரிவித்தனர்.


துவாக்குடியில் மாலை4.30,மணிக்குதேசிய அளவில் வெற்றி பெற்ற ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில், தமிழ்நாடு ஏரோஸ் கோட்டோபால் சங்கம் சார்பில் தேசிய அளவில் வெற்றி பெற்ற ரோலர் ஸ்கேட்டிங் வீரர்களின் பேரணி சங்கத்தின் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில் நடைப்பெற்றது செயலாளர் பிரவீன் ஜான்சன், பயிற்சியாளர் அமல் ஜோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை திருச்சிமாவட்டகாவல்துறை. SP.அவர்களின் ஆலோசனையின் பேரில் திருவெறும்பூர் காவல்சரக DSP.திரு.அறிவழகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்


இந்த பேரணி துவாக்குடி அண்ணா வளைவில் தொடங்கி சுமார் 5கிலோ மீட்டர் தூரம் சென்று வாழவந்தான் கோட்டையில் நிறைவடைந்தது.
பேரணியின் போது 50,க்கும் மேற்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தி வந்தே மாதரம் என கோஷமிட்டு வந்தனர்.
பேரணி நிறைவடைந்தவுடன் அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கினர்.
நிகழ்வில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருமதி.கமலவேணி, திரு.ஈஸ்வரன், சப்- இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள், தேசிய அளவில் வெற்றி
பெற்ற ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணியன்.


