ஏழ்மை நிலையில் உள்ள மாணவியின் மேற்படிப்பிற்கு கல்வி உதவித் தொகை முசிறி காவல் நிலையத்தினர் வழங்கினர்

ஏழ்மை நிலையில் உள்ள மாணவியின் மேற்படிப்பிற்கு கல்வி உதவித் தொகை முசிறி காவல் நிலையத்தினர் வழங்கினர்.

திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெருவை சேர்ந்த ஆனந்தி மற்றும் அமுல் வேல் தம்பதியரின் மூத்த மகள் ஐஸ்வர்யா வயது 20 .இவர் பி.ஏ வரலாறு படித்துள்ளார் இவர் 19 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு பெண்கள் வாலிபால் அணியில் பங்கு பெற்று தென்னிந்திய அளவில் முதலிடம் பெற்ற அணியில் விளையாடி உள்ளார்.

- Advertisement -

இவரது தாயார் ஆனந்தி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்காலிக உதவியாளராக உள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை அமுல் வேல் மாற்றுத்திறனாளி ஆவார். ஐஸ்வர்யாவிற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிபிஎட் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது.

அதற்கு வருட கட்டணம் தங்குமிடம் உட்பட ரூ 53 ஆயிரம் ஆகும். ஆனந்தி தனது மகள் படிப்பிற்கு உதவி செய்யும்படி முசிறி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் இடம் கோரிக்கை வைத்தார்.

முசிறி காவல் நிலையத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற தொகையை கொடுத்து ரூபாய் 53 ஆயிரத்தை சேர்த்து ஆனந்தி மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் நாகராஜ் கோகிலா சத்திய விநாயகம் ராஜேந்திரன் வடிவேல் தலைமை காவலர்கள் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் அரசு வழக்கறிஞர் சப்தரிஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்.பழனிசாமி

Leave A Reply

Your email address will not be published.