மதுரை மாநகரகாவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சககத்தின் மெச்சத்தகுந்த காவல் பணிக்கான விருது காவல் ஆணையர்பாராட்டு
மதுரை மாநகரகாவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சககத்தின் சிறந்தகாவல் சேவைபணிக்கான(உத்கிருஷ்ட் சேவா) விருது காவல் ஆணையர் Dr.J.லோகநாதன் IPS பாராட்டு.
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் சிறந்த சேவைக்கான (உத்கிருஷ்ட் சேவா) 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான பதக்கங்கள்.
பெற தேர்வு செய்யப்பட்டிருந்த மதுரை மாநகர் காவல் துறையின் காவல் கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்து திட்டமிடுதல்) திரு.A.திருமலைக்குமார், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.R.எஸ்தர் மற்றும் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு.S.அருண்குமார் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி N.ஹேமமாலா ஆகியோருக்கு மாநகர காவல் ஆணையர் முனைவர் J. லோகநாதன் IPS., அவர்கள் பதக்கங்களை வழங்கி, காவல் துறையின் மெச்சத் தகுந்த பணிக்காக வழங்கப்படும் இவ்விருது மேலும் பணியில் உத்வேகத்தை ஏற்படுத்தும் எனவும் விருது பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) மற்றும் தல்லாகுளம் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்புநிருபர்.J.பீமராஜ்.