மதுரை தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு.

மதுரை தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர்J.லோகநாதன் IPS பாராட்டு.

- Advertisement -

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தின் மீது, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மதுரை நிலையூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் குட்டி கமல்(27) என்பவரை கவனித்த திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் மற்றும் மாட்டுத்தாவணி காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.அய்யனார் செல்வம் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் மிக சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு தற்கொலை முயற்சியில் இருந்த இளைஞரை காப்பாற்றி அறிவுரை வழங்கினர். காவலர்களின் இந்த வீரதீர செயலை பாராட்டும்விதமாக, மாநகர காவல் ஆணையர் J.லோகநாதன்IPS அவர்கள் காவலர்களை நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

சிறப்புநிருபர்.J.பீமராஜ்.

Leave A Reply

Your email address will not be published.