பிறந்து 7நாட்களேஆன குழந்தைக்கு இருதய அறுவைசிகிச்சை காவல்துறையினர்,ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா நவகுடியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி துர்கா தேவி கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 27ம் தேதி அன்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு இருதய குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது பிறந்து 7 நாட்களே ஆன ஒரு குழந்தைக்கு, இருதய குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதன்படி மருத்துவ சிகிச்சை செய்ய கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் நவீன இயந்திரங்கள் இருப்பதால், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனைக்கு அக்குழந்தையை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் அந்த ஆண் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக காவல்துறையினரின் உதவியும் கோரப்பட்டது. காவல்துறையினர், ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் விரைவாக வருவதற்காக ‘கிரீன் காரிடர்’ திட்டத்தின் கீழ் நெரிசலற்ற போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.அதைத் தொடர்ந்து குழந்தை மற்றும் குழந்தையின் பெற்றோர், மருத்துவப் பணியாளர்களுடன் ஆம்புலன்ஸ் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து(செப்.4 ) மதியம் 1 மணிக்கு புறப்பட்டது. ஆம்புலன்ஸை ஓட்டுநர் அஸ்வின் ஓட்டினார். ஆம்புலன்ஸ் வாகனத்துடன் போலீஸ் வாகனமும் வந்தது.
தொடர்ந்து இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையை வந்தடைந்தது அதைத் தொடர்ந்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. குழந்தையை விரைவாக ஆம்புலன்ஸில் அழைத்து வந்த திருச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் அஸ்வினை மருத்துவர்கள், காவல்துறையினர் பாராட்டினர்.இந்த துரித பணியை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் திரு. ஹரி கிருஷ்ணன், அப்துல்லா ஹாகிப் மற்றும் காவலர்கள் கௌதமன், தர்மராஜ், அபினேஷ் ஆகியோருக்கு போலீஸ் பார்வை குழுமம் சார்பாக வாழ்த்துக்கள்.
தலைமைநிருபர்.மு.பாண்டியராஜன்.