கிருஷ்ணகிரி துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை பாராட்டிய DGP.சங்கர்ஜிவால் IPS.
கிருஷ்ணகிரி துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய DGP.சங்கர்ஜிவால் IPS.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் துரிதமாக செயல்பட்டு தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் அழைப்புகளின் தரவுகளை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்து குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து கைது செய்த காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் DGP.சங்கர்ஜிவால் IPS அவர்கள் நேரில் அழைத்து பணவெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .
இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காவிட்டால் அது குற்றம் செய்தோருக்கு மேலும் துணிச்சலை கொடுப்பது போல் ஆகிவிடும் எனவே இது போன்ற சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்வந்து காவல்துறையில் புகார் அளிக்கும்படி காவல்துறைசார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிருபர்.முகமதுயூனுஸ்.