கொடைக்கானல் ரோட்டில்திரியும் மாடுகளை திருடி மாட்டுகறி விற்பனை செய்தவர்கள் கைது காவல் துறையினர் அதிரடி.

கொடைக்கானல் ரோட்டில் திரியும் மாடுகளை திருடி மாட்டுகறி விற்பனை செய்தவர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.

திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானலில் நகர்ப்பகுதிகளில் சுற்றி திரியும் வீட்டில் வளர்க்கும் பசு மாடுகள்,மற்றும் மாடுகளை கண்காணித்து கடத்தி இறைச்சிக்காக கொன்று, கறியாக விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் உதவியாளர் கைது,சுமார் 30க்கும் மேற்பட்டமாடுகள் காணமால் போனதாக  மாடு உரிமையாளர்கள் குற்றச்சாட்டு, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வீட்டில் வளர்க்கும் மாடுகளை மெய்ச்சலுக்காக வெளியே அனுப்புவதை மாட்டின் உரிமையாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர், மேலும் இந்த மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வண்ணமாக பிரதான சாலைகளில் மாடுகள் முகாமிடுவதும் தொடர் கதையாக உள்ளது,

இந்நிலையில் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான பெர்ன்ஹில் ரோடு பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை என்பவர் கடந்த 4 தினங்களுக்கு முன்பு செனையாக உள்ள பசு மாடு ஒன்று காணமால் போய் உள்ளது,இது குறித்து காவல் துணை கண்காப்பளாரிடம் DSP.மதுமிதா அவர்களிடம் கடந்த  புகார் மனு அளித்துள்ளார், இது குறித்து DSP உத்தரவின்படி காவல்ஆய்வாளர் திரு.பாஸ்கரன் அவர்கள்தலைமையிலான காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்,

- Advertisement -

அப்போது அண்ணாசாலை,அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி, காட்சிகளில் பசு மாட்டு ஒன்றின் மீது கயிறு கட்டியவாறு அதிவேகமாக சென்றுள்ளது, இதன்அடிபடையில் காவல் துறையினர் அண்ணாசாலை பகுதியில் செயல்பட்டும் வரும் மாட்டு இறைச்சி கடை உரிமையாளரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்ட போது,

அண்ணாசாலையை சேர்ந்த முகமது அசாருதீன் (36)-கடைஉரிமையாளர்),தாண்டிக்குடி,கேசி பட்டியை சேர்ந்த மருது(35),உதவியாளர்) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் மாடுகளை கண்காணித்து,பின் தொடர்ந்து கடத்தி அதனை கொன்று இறைச்சியாக விற்பனை செய்ததையும் ஒப்புகொண்டுள்ளனர்,

இது குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர், இதனையடுத்து சுமார் 10 ,க்கும் மேற்பட்டோர் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு வருகை தந்து தங்களது மாடுகளையும் கடந்த சிலதினங்களாக  காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்,
மேலும் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே செனையாக உள்ள பசு மாடுகள் அதிக எடை இருப்பதனால்,பசு மாடுகளை குறிவைத்து கடத்தி,இறைச்சியாக விற்பனை செய்ததாகவும்,மேலும் இது போன்று மாடுகளை கடத்தி,இறைச்சிக்காக இந்த கடைகளில் மட்டும் விற்பனையானதா அல்லது மற்ற மாட்டு இறைச்சி கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டதா என விசாரணைசெய்யவேண்டும் என மாட்டின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இச்சம்பவம் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை மாட்டின் உரிமையாளர்கள் மெய்சலுக்காக வெளியே விடும் மாடுகளை தடுக்க வேண்டும் என்றும் இது போன்றுசாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாட்டின் உரிமையாளர்கள்மீது  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது.

நிரபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.