கொடைக்கானல் போலியாக காவல் SI உடையில் வந்துமிரட்டி பணம்பறித்தஆசாமி கைது.
கொடைக்கானலில் போலியாக காவலர் உடையுடன் வந்து 10 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய துரைராஜ் S/O.பொன்னுசாமி.செம்பட்டி. என்பவரை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்தனர் .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் .இவர் சில்லறை முறையில் மதுபானம் விற்று தற்போது திருந்தி 5 மாதங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார் .இந்த நிலையில் செல்வத்தின் வீட்டிற்க்கு பழனி மது விலக்கு காவல் பிரிவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் என்று காவல் துறையின் சீருடையுடன் வந்து அறிமுகமாகி உள்ளார் .மது விற்பனை புகார் சம்மந்தமாக எஸ்.பி.அலுவலகத்திலிருந்து புகாரை விசாரிக்க வந்துள்ளதாகவும் , மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் தற்போது பணம் கொடுக்கவில்லை என்றால் ஜெயிலில் போட்டு விடுவேன் என்று கூறியுள்ளார் .
இதனை கண்டு பயந்த செல்வம் தன்னிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதற்கு போலி SI. ஆக வந்த துரைராஜ் ATM இல் எடுத்து கொடுக்க செல்லி பெருமாள்மலை வந்துள்ளனர்.அங்கு ATM இயந்திரம் செயல்படாமல் இருந்ததால் கொடைக்கானல் நகருக்கு போலி காவலரை கூட்டி வந்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவர் கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து துரை ராஜ் என்பவர் போலியாக காவலர் உடையுடன் வந்து மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது. உடனே காவலர்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் சார்பு ஆய்வாளர் நீலமேகம் விசாரித்து வருகின்றனர்.
நிருபர்.R.குப்புசாமி