கொடைக்கானல் சுற்றுலாபயணிகள்அடிப்படை வசதிகுறித்து கலெக்டர் சரவணன் IAS ஆய்வு.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதி உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் தொடர்ந்து கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் பேருந்தை தவிர இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தினால் இரு சக்கர வாகனங்களுக்கு 2000,ரூபாய் அபராதமும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5000,ரூபாய் அபராதமும் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு .. மீறினால் வானக உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் கொடைக்கானலில் உயர்நீதி மன்ற உத்தரவின் படி அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்தம், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் IAS அவர்கள்ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வில் கொடைக்கானலில் வட்டக்கானல் , அப்சர்வேட்டரி , பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார் . தொடர்ந்து பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சரவணன் IASஅவர்கள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் பேருந்தை தவிர இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தினால் இரு சக்கர வாகனங்களுக்கு 2000,ரூபாய் அபராதமும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5000, ரூபாய் அபராதமும் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .
மீறினால் வானக உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் இயந்திரத்தில் குடிநீர் வசதி சரியாக உள்ளதா எனவும் தண்ணீரை குடித்து ஆய்வு செய்தார் .
நிருபர்.R.குப்புசாமி.


