தொடர் கஞ்சா வேட்டையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.5,பேர்கைது.1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக ஈத்தாமொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர்.
ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவரின் மகன் அபிராம் குமார்(20)
மங்காவிளை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரின் மகன் கபின்(25)
கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் சுரேஷ்(29),
இடலாக்குடி அச்சன் கிணறு தெருவை சேர்ந்த மாஹின் அபூபக்கர் என்பவரின் மகன் முகமது ஷாபி(31),
இரணியல் பகுதியை சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன் அபினேஷ்(29) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மேலும்வேறுயாருக்கும் தொடர்புள்ளதா என தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இளைஞர்கள் போதை பாதையில் இருந்து விடுபட்டு வெற்றிப்பாதையில் பயணம் செய்து வாழ்க்கையில் வெற்றி அடைய கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைசார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிருபர்.J.ஜெயவேல்முருகன்.