காஞ்சிபுரமாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் கடையைஉடைத்து ரூ. 53,லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு குற்றவாளிகள் கைது தனிப்படை காவல் குழுவினர் அதிரடி.
காஞ்சிபுர மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் கடையை உடைத்து ரூ. 53,லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு குற்றவாளிகள் கைது தனிப்படை காவல் குழுவினர் அதிரடி.

காஞ்சிபுரமாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுங்குவார்சத்திரம் பஜார், ராஜேந்திரன் காம்ப்ளக்ஸில் அப்துல் ரஹ்மான் (32) த/பெ.முகமதுஅலி, காயிதேமில்லத் தெரு, மொளச்சூர் கிராமம். சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா. என்பவர் Bismi Mobileworld என்ற பெயரில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.

கடந்த 16.07.2023 அன்று இரவு 09.30 மணியளவில் அப்துல் ரஹ்மான் வழக்கம் போல் கடையில் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் 17.07.2023 அன்று காலை 07.00 மணியளவில் கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் அப்துல் ரஹ்மான் 17.07.2023 அன்று சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்படி குற்றவழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டி காவல் ஆய்வாளர்கள் திரு.சங்கர் மற்றும் திரு.பாலமுருகன் ஆகியோர்கள் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும். மேற்படி குற்ற வழக்கு சம்மந்தமாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் மேற்படி குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
உடனே தனிப்படையினர் விரைந்து ஹரியானா மாநிலம் சென்று ஹரியானா காவல் துறையினர் உதவியுடன் மேற்படி குற்ற வழக்கு சம்மந்தமாக ஆய்வு செய்ததில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த த/பெ.அப்துல் கரீம், நூ கிராமம், மேவாட்
1) ஹமீத் ஹீசைன்(35) த/பெ.அப்துல் 2)இர்பான்(28) த/பெ.தீன் மொஹத். நஹர்பூர் கிராமம், மேவாட் மாவட்டம்,
3)ஜபித்(25) த/பெ.இக்பால், நஹர்பூர் கிராமம், மேவாட் கிராமம்,
4)அலிஜான் (50) த/பெ.தீன் முகத், நஹர்பூர் கிராமம், மேவாட் மாவட்டம் ஆகியோர்கள் மேற்படி குற்ற வழக்கில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து தனிப்படையினர் (21.07.2023) மேற்படி 4 குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 53 லட்சம் மதிப்பிலான 234, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்படி குற்ற வழக்கில் அவர்கள் பயன்படுத்திய கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்ற வழக்கில் குற்றவாளிகளை துரிதமாக விரைந்து கைது செய்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு தொழிற்சாலைகளில் புதியதாக ஆட்களை தேர்வுசெய்யும் போது அவர்களின் நன்னடத்தைகளை சரிபார்க்க வேண்டும் எனவும். மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வடமாநிலங்களில் வழக்குகள் இருப்பதாகவும். அதே போன்று தமிழ்நாட்டில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்தார்.
சிறப்புநிருபர்.ம.சசி.


