திருச்சி ஜங்ஷன்; MLA பழனியாண்டியை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டம்.

திருச்சி ஜங்ஷன்; MLA பழனியாண்டியை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டம்.

 

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே திருச்சி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கரூர் மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் ஜெபாஸ்டினை கண் மூடி தானமாக கொடூரமாக தாக்கி ஒளிப்பதிவு செய்தகேமராவை உடைத்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து செய்தியாளர்களை தாக்கியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வெளியான ஆடியோவில் MLA வை பார்த்து செய்தியாளர் அண்ணே உங்களை எனக்கு நல்லா தெரியும் ஏன்இப்படி என்று கேள்வி எழுப்பி அடி வாங்கிய அலறல் சத்தமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூரகொலைவெறி தாக்குதலை கண்டித்து திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சியாக இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தினர் .

நிருபர்.B.ஶ்ரீநிவாசன்.

Leave A Reply

Your email address will not be published.