இந்தியா உலகிலேயே வரும் 2047 ஆம் ஆண்டு முதன்மை நாடாக மாறி இருக்கும் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை பள்ளி முப்பெரும் விழாவில் பேச்சு
இந்தியா உலகிலேயே வரும் 2047 ஆம் ஆண்டு முதன்மை நாடாக மாறி இருக்கும் பாஜக மாநில தலைவர் கே .அண்ணாமலை பள்ளி முப்பெரும் விழாவில் பேச்சு
காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 37 வது ஆண்டு விழா அப்பள்ளியின் நிறுவனர் கே.டி.எஸ் மணி அவர்களின் நினைவு தினம் சிறந்த மாணவர்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள்
வழங்கும் விழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது
பள்ளியின் தலைவர்
எம்.அருண்குமார் தலைமை வகித்தார் பள்ளி தலைமை நிர்வாக அலுவலர்கள் இ.விநாயகமூர்த்தி
எம்.வெங்கடேசன் முதல்வர். எஸ். நிர்மலா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் செயலாளர் பி. ரமேஷ் வரவேற்றார் விழாவில் பள்ளியில் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய 300 மாணவர்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை இலவசமாக பாஜக மாநில தலைவர்
கே.அண்ணாமலை அவர்கள்வழங்கி உரையாற்றினார் வரும் 2047 ஆம் ஆண்டு இந்தியா உலகிலேயே முதன்மை நாடாக மாறி இருக்கும் அப்படி மாறுவதற்கு தேவையான சிறந்த கல்வி இன்றைக்கு அவசியமாகி இருக்கிறது பள்ளியில் பயிலும் மாணவர்கள் நல்ல ஆசிரியர்களாக வந்து அவர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் அவ்வாறு சிறந்த மாணவர்கள் நேர்மையான அரசியல்வாதிகளாக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் நம் தேசத்திற்கு மிகவும் நேர்மையான அரசியல்வாதிகள் தேவைப்படுகிறார்கள் என்றார் மேலும் மருத்துவர்
அ.கௌசிக்குமார்நன்றி கூறினார் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர்
எம்.அருண்குமார் ரூபாய் 2 லட்சத்தை கட்சி நிதியாக வழங்கினார் அந்த தொகையை பள்ளியின் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்துமாறு அவரிடமே அண்ணாமலை திருப்பி கொடுத்தார் அவரின் இந்த செயல் மாணவர்களின் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
சிறப்பு நிருபர்.
ம. சசி