மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வோர்கள் சொத்துகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கைபாயும் SP. சிவபிரசாத் எச்சரிக்கை
.மதுரைஉசிலம்பட்டி உட்கோட்டம், உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்உதவிஆய்வாளர் திரு. பால்ராஜ் தலைமையில், போலீசார் வத்தல குண்டு ரோடு அருகே தீவிர ரோந்து பணிமேற்க்கொண்டுசோதனைசெய்த போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணை செய்ததில், கஞ்சா சுமார் 06 கிலோ விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது, மேற்படி பெண் உட்பட இரண்டு நபர்களை கைது செய்த உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலைய போலீசார், மேற்படி நபர்களிடமிருந்து கஞ்சா 06 கிலோ, பணம் ரூ.10000/- மற்றும் செல்போன் இரண்டு பறிமுதல் செய்தனர்.
மேற்படி கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் மீது உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில்
ஈடுபடுவோர்கள், பதுக்குபவர்கள், விற்பனை செய்பவர்கள்
மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் சம்மந்தப்பட்ட நபர்களின் அசையும் மற்றும்
அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிறப்புநிருபர்.J.பீமராஜ்.