கடலுார் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில், ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு, ரூ. 32 லட்சம் சம்பந்தப் பட்டவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது’ என DGP. Dr.C. சைலேந்திரபாபு IPS கூறினார்.
கடலுார் மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு வருகை தந்த IPS Dr.C. சைலேந்திரபாபு, குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கினார்.
முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்.
பின்னர் Dr.C. சைலேந்திரபாபு IPS. நிருபர்களிடம் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் புலன் விசாரணை சிறப்பாக நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, முத்தாண்டிக்குப்பம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து, 45 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது பாராட்டுக்குரியது. புலன் விசாரணையில், அறிவியல் ரீதியாக பல்வேறு சாதனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெரிய அளவிலான கலவரம், வட மாநிலத்தவர் கொள்ளை மற்றும் தொடர் கொள்ளை போன்றவை நடைபெறாமல் பாதுகாத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.