சிறப்பான காவல் பணிக்காக DSP அறிவழகன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்திய IG.G. கார்த்திகேயன் IPS.
திருச்சி மாவட்ட காவல்துறையில் சிறப்பான காவல் பணிக்காக DSP அறிவழகன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்திய IG.G. கார்த்திகேயன் IPS.
திருச்சி மாவட்ட காவல்துறையில் திருவெறும்பூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் DSP.திரு. அறிவழகன் அவர்கள் திருவெறும்பூர் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவாற்றல் மேம்படுதல் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆக்கபூர்வமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி மற்றும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தமது காவல் சரக காவல் குழுவினருடன் நடத்தி பொதுமக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுடன் வாழ பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியும் திருவெறும்பூர் காவல் சரகத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைக மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற காவல் பணிகளில் தமது காவல் சரக காவல்துறையினரை ஊக்கப்படுத்தி தீவிரமாக பணியாற்ற வைத்து சிறப்பாக காவல் பணியாற்றியதற்கு 2023,ஆம் ஆண்டின் சிறப்பு காவல் பணிக்கான பாராட்டு சான்றிதழை மத்திய மண்டல IG.திரு.G. கார்த்திகேயன் IPS அவர்களும் .
திருச்சி மாவட்ட SP. திரு. வருண்குமார் IPS அவர்களும் DSP. திரு. அறிவழகன் அவர்களுக்கு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .போலீஸ் பார்வை குழுமம் சார்பாக DSP. திரு. அறிவழகன் அவர்களுக்குபாராட்டினையும் வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கிறோம்
தலைமைநிருபர்.நா.ராக்கேஷ்சுப்ரமணி.