*நானே சரி செய்வேன்”…குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போலீஸ் தமிழரசன்.

கோவை ‘நானே சரி செய்வேன்’ குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்   தமிழரசன்.

 

கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த திரு.தமிழரசன் போக்குவரத்து காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் ஒரு சில பகுதியில் தரமற்ற சாலை அமைத்திருப்பதால் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் கடந்த சிலநாட்களாக கோவையில் மழை பெய்ததால் சில பகுதிகளில் சாலையில் பழுதடைந்த நிலையில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து கோவை கூட்செட் சாலை ஒருபுறம் பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். மேலும் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை என்பதால் அதிகளவில் இந்த சாலையில் வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். மேலும் சாலை பழுதடைந்ததால் அவ்வப்போவது கடுமையானக்நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

- Advertisement -

நான்  பணியாற்றும்  இடத்தை நானே சரி செய்வேன் கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீஸ் தமிழரசன்.

இதுபோன்று ஆத்மாஇதுபோன்று த்தமா அவங்க அவங்க வேலைய பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

சாலையை சீரமைக்கும் வகையில் வெரைட்டி ஹால் போக்குவரத்து காவலர் தமிழரசன் அவர்கள் அந்த பகுதியில் பணி பார்த்து கொண்டிருந்தபோது சாலை பழுதானதை கண்டு அருகியிருந்த ஜல்லிகற்க்களை கொண்டு பழுதான பகுதியில் கற்க்களை கொட்டி சாலையை சீரமைத்தார். தமிழரசன் காவலர் உடையில் சாலையை சீரமைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவருக்கு இணையதளம் மூலமாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.