கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ் வயது 60 தந்தை பெயர் சங்கர்
சிவராஜ் பல மாதங்களாக
மது போதைக்கு அடிமையாக இருந்ததால் மதுரையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் .
இந்நிலையில் மீண்டும் தன்னுடைய சொந்த ஊர் கொடைக்கானலுக்கு வந்த நிலையில்
தன்னுடன் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நண்பர்களை
4 பேரை தன்னுடன் அழைத்து வந்துள்ளார்
மேலும் பெரும்பள்ளம் செல்லும் சாலையில் உள்ள சிவாராஜ் சொந்தமான தங்கும் விடுதி உள்ளதால் அங்கு ஒரு வாரமாக தங்கி உள்ளனர் .

- Advertisement -

மேலும்சிவராஜ் கடந்த நான்கு நாளாக காணவில்லை என்று சிவராஜ் அக்கா சுமதி கொடை காவல்துறையினரிடம் புகார் அளித்து வந்துள்ளார் .புகாரின் பேரில் கொடைக்கானல் காவல்துறையினர் சிவராஜ்க்கு சொந்தமான தங்கும் விடுதியில் மற்றும் அவர் அதிகமாக செல்லும் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர் .
இந்நிலையில் சிவராஜ் சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்த நான்கு பேர்களை காணாத நிலையில் நான்கு பேர்களையும் மதுரையில் வைத்து கைது செய்ததாக கூறப்படுகிறது .
மேலும் கொடைக்கானல் காவல்துறையினர் அப்பகுதியில் தேடி பார்க்கும்போது விடுதியின் அருகில் குளிர் காலங்களில் பயன் படுத்த படும் கேம்ப் ஃபைர் பகுதியில் சில எலும்பு துண்டுகள் பாதி எரிந்த நிலையில் இருந்து உள்ளது .

இதனை தொடர்ந்து தங்கும் விடுதியில் பின்புறம் பாதி எரிந்த நிலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆண் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர் .
மேலும் இந்த சடலம் சிவராஜா அல்லது வேறு ஒரு நபர மேலும் கொலைக்கான காரணம் முன் விரோதமா, மது போதையில் நடந்ததா , சொத்து பிரச்சனையா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
மேலும் இச்சம்பவம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நிருபர்.R.குப்புசாமி.

 

Leave A Reply

Your email address will not be published.