தஞ்சாவூரில் அரசால்தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போதைபொருட்கள் பறிமுதல் பதுக்கல்பேர்வழி கைது காவல் துறையினர் அதிரடி

தஞ்சாவூரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போதை பொருட்கள் பறிமுதல் பதுக்கல் பேர்வழிகைது காவல் துறையினர் அதிரடி.

தஞ்சையில், குடோனில் பதுக்கி வைத்திருந்த 120, கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் முழுவதும் குட்கா மற்றும் புகையிலை, கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதுடன், போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என காவல்கண்காணிப்பாளர் SP.திரு. ஆஷிஷ் ராவத் IPS உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் சந்து விசிறிக்கார தெருவில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை டவுன் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.தென்னரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் சக போலீசாரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே குட்கா விற்பனை செய்வது தெரிய வந்தது.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கவுஷ்செரீப்(வயது 45) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு குடோனுக்கு போலீசார் சென்றனர்.

அந்த குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 120, கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து கவுஷ்செரீப்பை கைது செய்தார்.

நிருபர்.சக்திவேல்.

Leave A Reply

Your email address will not be published.